சேலம்:

சேலத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைக்காக திடீர் ஆய்வு செய்த, மாவட்ட ஆட்சியர், ரோகின,  போலி மருத்துவரை கண்டுபிடித்து   காவல் துறையினரிடம் ஒப்படைத்தார்.

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி மற்றும் சங்ககிரி பகுதிகளில் டெங்கு ஒழிப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரோகினி  ஆய்வு செய்தார். அப்போது, மகுடஞ்சாவடி பேருந்து நிறுத்தத்தில் மருந்தகம் என்ற பெயரில் நோயாளிகளுக்கு ஆங்கில வழி மருத்துவம் பார்த்து வந்த பாஸ்கர் என்பவரை விசாரித்தார். உரிய படிப்பு ஏதும் படக்காமல் அவர் மருத்துவம் பார்த்து வந்ததும் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு ஊசி மற்றும் ஆங்கில மருந்து அளித்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து உடனடியாக பாஸ்கரை காவல் துறையினரிடம் ஒப்படைத்த ஆட்சியர் ரோஹினி, அங்கிருந்த ஊசி மற்றும் மருந்து பொருட்களை பறிமுதல் செய்தார். தொடர்ந்து மருந்தகம் மற்றும் அதனுடன் சிகிச்சை அளித்து வந்த இடத்தை தானே பூட்டி சீல் வைத்தார்.

மேலும் மகுடஞ்சாவடி பகுதியில் டெங்கு ஒழிப்பு பணிகளை சரிவர செய்யாத  ஊராட்சி செயலாளர் செந்தில் என்பவரை பணியிட மாற்றம் செய்தும் ரோஹனி உத்தரவிட்டார்.