சென்னை: சேலம் கிழக்கு மாவட்டம் – ஆத்தூர் (தனி) தொகுதி திமுக வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அவருக்கு பதிலாக   திமுக வேட்பாளராக  கு.சின்னத்துரை BE அவர்கள் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கழகத்தின் சார்பில் ஏற்கனவே போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட திருமதி  ஜீவா ஸ்டாலின் பெயர் அறிவிக்கப்பட்டதற்கு மாறாக, தற்போது கு.சின்னத்துரை  ஆத்தூர் (தனி) தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என குறிப்பிடப்பட்டு உள்ளது.