சேலம், கிழக்கு, மேற்கு, நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர்கள் மாற்றம்! திமுக தலைமை அறிவிப்பு

சென்னை:

சேலம், நாமக்கல் மாவட்ட செயலாளர்களை மாற்றி திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில்,

சேலம் கிழக்கு மாவட்டக் கழக பொறுப்பாளர் வீரபாண்டி ஆ.ராஜா, பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக சேலம் மேற்கு மாவட்டக்கழக செயலாளர்  எஸ்.ஆர்.சிவலிங்கம்  சேலம் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

சேலம் மேற்கு மாவட்டக்கழக செயலாளர்  எஸ்.ஆர்.சிவலிங்கம் கிழக்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதால், சேலம் மேற்கு மாவட்ட கழக பொறுப்பாளராக டி.எம் .செல்வகணபதி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

அதுபோல, நாமக்கல் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளார் காந்தி செல்வில், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக புதிய பொறுப்பாளராக கே.ஆர்.என். இராஜேஸ்குமார்  நியமிக்கப்பட்டு உள்ளார்.

முன்னாள் சேலம் கிழக்கு மாவட்டக் கழக பொறுப்பாளர் வீரபாண்டி ஆ.ராஜா, கழக தேர்தல் பணிக்குழுச் செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாவட்டக் கழக அமைப்பின் பிற நிர்வாகிகள் புதியதாக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.