சேலம்:  கால்வாயில் விழுந்து மாணவன் பலி! ஆட்சியர் ரோகினியை முற்றுகையிட்ட மக்கள்!

சேலத்தில் பெய்த கனமழை காரணமாக, 10-வகுப்பு மாணவன் கால்வாயில் விழுந்து  பலியானா சம்பவத்தால், ஆத்திரமடைந்த மக்கள், மாவட்ட ஆட்சியர் ரோகினியை முற்றுகையிட்டனர்.

 

 

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்பசலனத்தால் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சேலத்தில் நேற்று இரவு முழுவதும்   கனமழை பெய்தது.   இதன் காரணமாக அம்மாபேட்டை, கிச்சிபாளையம் உள்ளிட்ட இடங்களில் தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது.

குறிப்பாக சேலம் 41-வது வார்டு முழுதும் மழை நீர் தேங்கி  வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.  இந்த நிலையில் அங்குள்ள கழிவுநீர் கால்வாயில் ஒன்றில், 10-ம் வகுப்பு மாணவன் முகமது ஷாத் விழுந்து பலியானார்.

கழிவு நீர்க கால்வாயையும், நீர் செல்லும் இதர வழிகளையும் முறையாக மாநகராட்சி பராமரித்திருந்தால், இப்படி நீர் தேங்கி மாணவர் பலியாகியிருக்கமாட்டார்கள் என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் மாநகராட்சி நிர்வாகம் கழிவு நீர் செல்ல தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆட்சியர் ரோகினியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.