சேலம் சுகவனேஸ்வரர் கோயில் யானை இயற்கையாக மரணம் அடைந்தது

சேலம்:

க்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட சேலம் சுகவனேஸ்வரர் கோயில் யானை இயற்கையாக மரணம் அடைந்தது.

நோயினால் அவதிப்பட்டு வந்த அந்த யானையை கருணை கொலை செய்யலாம் என உயர்நீதி மன்றம் அறிவித்துள்ள நிலையில், கோயில் யானை இயற்கையாகவே மரணம் அடைந்தது.

 

42வயதான  சேலம் சுகவனேஸ்வரர் கோயில் பெண் யானை ராஜேஸ்வரி பக்கவாத நோயினால் கால்கள் பாதிக்கப்பட்டு, எழுந்து நிற்க முடியாமலும் திரும்பிப் படுக்க முடியாமலும், படுத்த படுக்கையாக உணவு எதுவும் உண்ணாமல், மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்து வந்தது.

கால்நடை மருத்துவ குழுவினர் தொடர் சிகிச்சை அளித்தும்,  ராஜேஸ்வரியின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாமல், வேதனையுடன் உயிருக்கு போராடி வந்தது.

இந்நிலையில்,  நோயுற்று உயிருக்கு போராடும்  சேலம் சுகவனேஸ்வரர் கோயில் யானை ராஜேஸ்வரியை கருணை கொலை செய்யலாம் என உயர்நீதி மன்றம் கடந்த வாரம் தீர்ப்பு கூறியிருந்தது.

இந்நிலையில், இன்று சுகவனேஸ்வரர் கோவில் யானை  ராஜேஸ்வரி இயற்கையாக மரணம் அடைந்தது. யானையை பக்தர்கள் வணங்கி வருகிறார்கள்.