சென்னை:
கொரோனாவால் நிறுத்தப்பட்ட உள்நாட்டு விமான சேவை 25ந்தேதி முதல் தொடங்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில்  சென்னை டூ சேலம் விமான சேவை இன்று மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 4வது கட்டமாக ஊரடங்கு மே 31ந்தேதி வரை  நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகள்  நிறுத்தப்பட்டன.
தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், மே 25ந்தேதி முதல் இந்தியாவில்  உள்நாட்டு விமான சேவையை தொடங்க அரசு அனுமதி அளித்தது. அதன்படி சிறிய ரக விமானங்கள், சமூக இடைவெளியுடன், பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து, இன்று முதல் சேலம், சென்னை இடையே  மீண்டும் விமான சேவை தொடங்கி உள்ளது முன்பு காலை 11.40 மணிக்கு சென்னையில் இருந்து சேலத்திற்கு விமானம் வரும். பின் 12.15 மணிக்கு சேலத்தில் இருந்து சென்னைக்கு அந்த விமானம் புறப்பட்டு செல்லும். தற்போது நேரம் மாற்றப்பட்டு உள்ளது
அதன்படி சென்னையில் இருந்து காலை 7.25 மணிக்கு புறப்படும் விமானம் சேலத்திற்கு 08.25 க்கு வந்தடைந்தது.
பின்னர் அந்த விமானம் சேலத்தில் இருந்து காலை 8.50 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு 09.50மணிக்கு  வந்தடைந்தது.