சேலம் ரயில் இணைப்பு கம்பி துண்டிப்பு – பழுது பார்த்த ஊழியர் விபத்தில் சிக்கி மரணம்

ஜோலார்பேட்டை

ரக்கோணம் – சேலம் பாசஞ்சர் ரயிலில் பெண்டோ எனப்படும் இணைப்புக் கம்பி துண்டிக்கப்பட்டதைச் சரி பார்த்த ரயில்வே  ஊழியர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

மின்சார ரயிலுக்கும் மேலே உள்ள மின்சாரக் கம்பிகளுக்கும் இடையே இணைப்பு அளிக்கும் கம்பிக்கு பெண்டோ எனப் பெயர் ஆகும்.   நேற்று காலை 4.40க்கு அரக்கோணத்தில் இருந்து ஜோலார்பேட்டை வழியாகச் சேலம் வரை செல்லும் மெமோ பாசஞ்சர் ரயில் வழக்கம் போல் அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டது   அதன் பின்னர் 7.50க்கு ஜோலார்பேட்டை அடுத்த கேத்தாணட்பட்டி ரயில் நிலையம் அருகே வந்தபோது ரயில் இன்ஜினில் உள்ள பெண்டோ இரும்பு ராடு துண்டிக்கப்பட்டதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது

ரயில் உடனே அங்கு நிறுத்தப்பட்டு ரயில் ஓட்டுநர் ஜோலார்பேட்டை ரயில்வே அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்   உடனடியாக விபத்து தடுப்பு மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் சீரமைப்பின் ரயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது     இந்த பணியைப் புரிந்த கோபிநாத் (வயது 40) அரக்கோணம் ரயில் நிலையத்தில் சீனியர் டெக்னீசியன் ஆகப் பணி புரிந்து வருகிறார்

இவருடன் மற்றும் மூவர் இணைந்த குழுப் பணியை முடித்தது.  அதன் பிறகு பணியை முடித்த கோபிநாத் தனது வாகனத்தில் செல்ல ரயில்வே லைனை கடந்த போது அவர் மீது அங்கு வந்த லால்பாக் விரைவு ரயில்  மோதியது.    கோபிநாத் தூக்கி வீசப்பட்டு உடல் நசுங்கி உயிர் இழந்தார்.   அவருடைய உடல் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.