சேலம்: ரவுடிக்கு கேக் ஊட்டிய போலீஸ் இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

சேலம்:

சென்னையில் பிரபல ரவுடி பினு பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சேலத்தை சேர்ந்த ரவுடி சுசீந்திரன் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

இந்த விழாவில் கன்னங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் சீருடையுடன் சென்று கலந்து கொண்டார். சுசீந்திரன் வீட்டில் நடந்த இந்த விழாவில் கலந்துகொண்ட இன்ஸ்பெக்டர் சுசீந்திரனுக்கு கேக் ஊட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இந்த புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலானது. இதையடுத்து அவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரவுடி சுசீந்திரனுக்கு சால்வை அணிவிக்கும் புகைப்படமும் வைரலாகி வருகிறது.