வெளிநாடு செல்ல அனுமதி தேவை : சல்மான்கான் கோரிக்கை

ஜோத்பூர்

ஜோத்பூர் நீதிமன்றத்தில் நடிகர் சல்மான் கான் தாம் வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு மனு அளித்துள்ளார்.

கடந்த 1998 ஆம் ஆண்டு ராஜஸ்தான் வனப்பகுதியில் அரிய வகை மான்களை நடிகர் சல்மான்கான் வேட்டையாடினார்.    அப்போது இரு மான்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.  இந்த வழக்கு சுமார் 20 ஆண்டு காலம் நடந்தது.   ஜோத்பூர் நீதிமன்றம் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதித்தது.

இரண்டே நாட்கள் மட்டும் சிறையில் இருந்த சல்மான் கான் ஜாமீனில் வெளி வந்துள்ளார்.  தற்போது ஜோத்பூர் நீதிமன்றத்தில் சல்மான் கான் ஒரு மனு அளித்துள்ளார். அதில், தனக்கு நான்கு வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.  விரைவில் இந்த மனு விசாரணைக்கு வரும் என கூறப்படுகிறது.