55 –வது பிறந்த நாளை எளிமையாக கொண்டாடிய சல்மான் கான்…

 

இந்தி நடிகர் சல்மான் கானுக்கு நேற்று 55 – வது பிறந்த நாள். வழக்கமாக மும்பை பந்த்ராவில் உள்ள சல்மான் கான் வீட்டில், அவரது ரசிகர்கள் திரண்டு வாழ்த்து தெரிவிப்பது உண்டு.

கொரோனா காரணமாக இந்த பிறந்த நாளுக்கு ரசிகர்கள் யாரும் வர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்திருந்த சல்மான், வீட்டு முன்பாக இது குறித்து நோட்டீசும் ஒட்டி இருந்தார்.

இதனால் சல்மான் பிறந்தநாளான நேற்று அவரது வீட்டில் ரசிகர் கூட்டம் இல்லை.

மும்பை பான்வெல் பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் நேற்று காலை ’கேக்’ வெட்டி தனது பிறந்த நாளை அவர் எளிமையாக கொண்டாடினார்.

குடும்பத்தார் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் இதில் கலந்து கொண்டனர்.

“இந்த ஆண்டு, கொரோனா காரணமாக எல்லோருக்குமே பயங்கரமான ஆண்டாகும். மேலும் சினிமா உலகின் பல ஜாம்பவான்களும் இந்த ஆண்டு மரணம் அடைந்துள்ளனர். எனவே இந்த ஆண்டு என் பிறந்த நாளை நான் பெரிதாக கொண்டாடவில்லை” என சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

– பா. பாரதி

You may have missed