[embedyt] https://www.youtube.com/watch?v=WVLfRX0jlS4[/embedyt]

சல்மான் கான் நடிப்பில் ‘தபாங் 3’ படத்தை இயக்கி வருகிறார் பிரபுதேவா. இந்தப் படத்தில், சுதீப், சோனாக்‌ஷி சின்ஹா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். வருகிற டிசம்பர் மாதம் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2 இந்திப் படங்களை பிரபுதேவா இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் சல்மான் கானே ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது . இதுகுறித்து இன்னும் அதிகாரபூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் ‘தபங் 3’ படத்தின் டிரெய்லர் (Dabang 3 Trailer) வெளியிடப்பட்டுள்ளது. சல்மான் ஹீரோவாக நடிக்கும் தபாங் 3 படத்தை சல்மானின் தம்பி அர்பாஸ் கான் தயாரிக்கிறார்.தபங் 3 படத்திற்காக சல்மான் கான் உடல் எடையை குறைத்துள்ளார். இந்த படத்தில் கர்நாடகாவை சேர்ந்த கிச்சா சுதீப் வில்லன் பாத்திரத்தில் நடித்துள்ளார்.