சல்மான்கானின் ‘டைகர்’: மூன்று நாளில் ரூ.115 கோடி வசூல் சாதனை!

ல்மான்கான் நடித்து வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் டைகர் படம் வெளியான 3 நாட்களில் ரூ.115 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏக்தா டைகர் படத்தின் இரண்டாம் பாகமான டைகர் ஜிந்தா ஹே படம் கடந்த வெள்ளியன்று நாடு முழுவதும் வெளியானது.

நடிக்க அலி அப்பாஸ் ஜாபர்  இயக்கத்தில் வெளியான  இந்த படத்தில் சல்மான், கத்ரீனா ஜோடி நடித்துள்ளனர். இந்த படம் அதிரடி ஆக்ஷன் படிமாக உருவாகி வெளியானது.

தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை நாட்களால், தியேட்டர்களில் கூட்டம் அலைமோதுகிறது.

இதன் காரணமாக, கடந்த மூன்று தினங்களில் மட்டும் சல்மான்கானின் டைகர் படம் ரூ.114.93 கோடி வசூலித்திருக்கிறது. முதல் நாளில், ரூ.34.10 கோடி வசூலானதாகவும், இரண்டாவது நாளில் ரூ.35.30 கோடி ரூபாயும், 3வது நாளில் ரூ.45.53 கோடியும் வசூலாகி உள்ளதாக பாலிவுட் திரையுலக தகவல்கள் வெளியாகி  உள்ளது.