சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலையைத் தொடர்ந்து பாலிவுட்டில் நிலவும் வாரிசு அரசியல் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. மேலும், பலரும் வாரிசு நடிகர்களின் பக்கங்களுக்கே நேரடியாகச் சென்று அவர்களைச் சாட ஆரம்பித்தனர்.

இந்நிலையில் நடிகை சுஷ்மிதா சென் நடிக்கும் புதிய தொடருக்காக சல்மான் கான் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில் நெட்டிசன்கள் அவரை கடுமையாக சாடியுள்ளனர்.

இந்த பதிவில் நெட்டிசன்கள் பலர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் குறித்தும், பாலிவுட்டில் நிலவும் வாரிசு அரசியல் சர்ச்சை குறித்தும் கேள்விகளை எழுப்பி சல்மான் கானை கடுமையாக விமர்சித்து வந்தனர்.