ஆன்லைன் மோசடிக்கு பலியான இளம் இசையமைப்பாளர்…..!

இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., தனது சகோதரருக்கு பிறந்தநாள் பரிசாக ஒரு பிராண்டட் கடிகாரத்தை ஆர்டர் செய்துள்ளார் .

ஆனால் அந்த பிரபலமான ஆன்லைன் ஷாப்பிங் வலைத்தளத்திலிருந்து அவர் பெற்றது பெட்டியில் அழகாக நிரம்பிய பாறை கற்கள் தானாம்.

https://twitter.com/SamCSmusic/status/1305486886618542081

“@Flipkart மூலம் எனது சகோதரருக்கு பரிசாக ஆப்பிள் வாட்சை அனுப்பியிருந்தேன். அவர் கடிகாரத்திற்குப் பதிலாக அழகாக நிரம்பிய பாறை கற்களைப் பெற்றபோது நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். பிளிப்கார்ட் மீது புகாரை நாங்கள் எழுப்பியபோது, அவர்கள் எங்கள் பணத்தைத் திரும்பி தர மறுத்துவிட்டனர். தயவு செய்து #Flipkart இலிருந்து பெருட்களை வாங்கவேண்டாம். அவர்கள் ஏமாற்றுக்காரர்கள். # Flipkartfraud ” என சாம் சி.எஸ் பதிவிட்டுள்ளார் .