சமாஜ்வாடி செயற்குழு: 2019 தேர்தல் கூட்டணி முடிவு எடுக்க அகிலேஷ் யாதவுக்கு அதிகாரம்

--

லக்னோ:

2019 தேர்தல் கூட்டணி குறித்து முடிவு எடுக்க சமாஜ்வாடி கட்சி செயற்குழு கூட்டத்தில் அகிலேஷ் யாதவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச சமாஜ்வாடி கட்சி தேசிய செயற்குழு கூட்டம் இன்று நடந்தது. இது குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ராம்கோபால் கூறுகையில்,‘‘ 2019ம் ஆண்டு நடைபெறும் லோக்சபா தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் அகிலேஷ் யாதவுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் வாக்குச்சீட்டு முறையில் தான் நடத்த வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் நடத்தக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை தேர்தல் ஆணையம் மறுத்தால், தேர்தல் ஆணையத்தின் வாசலில் உட்கார்ந்து சத்யாகிரக போராட்டம் நடத்தப்படும்.

இந்த கூட்டத்தில் 90 சதவீத செயற்குழு உறுப்பினர்கள் கலந்தகொண்டுள்ளனர். சில தலைவர்கள் பங்கேற்கவில்லை. அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பது கட்டாயமில்லை’’ என்றார்.