சமாஜ்வாடி கட்சி இளைஞரணி தலைவர் சுட்டுக் கொலை

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் சமாஜ்வாடி கட்சி இளைஞரணி தலைவராக இருந்தவர் சாஹ்னி. வழக்கம் போல் கோவிலுக்கு சென்ற சாஹ்னியை இன்று ஒரு கும்பல் வழிமறித்து துப்பாக்கியால் சுட்டது.

ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சாஹ்னி இறந்தார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான நிலவுகிறது.