லகாபாத்

ந்துக்களின் வாக்குகளை கைப்பற்ற ரவிசங்கரை சிப்பாய் போல பா ஜ க பயன்படுத்துவதாக சமாஜ்வாதி கட்சி கூறியுள்ளது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய பாபர் மசூதி இடிக்கப்பட்டு அங்கு ராமர் கோயில் அமைப்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.   அதற்கான விசாரனை வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது.  இந்நிலையில் வாழும் கலை யோகா அமைப்பாளர் ரவிசங்கர் ராமர் கோயில் அமைப்பதில் சுமுக முடிவு ஏற்பட முயற்சிகள் எடுத்து வருகிறார்.

இது குறித்து சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ராமசங்கர் வித்யார்த்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  அவர், “ரவிசங்கர் பா ஜ க வால் உபயோகப் படுத்தப் படும் ஒரு சதுரங்க சிப்பாய்.    மக்கள் ஏற்கனவே ராமர் கோயில் பற்றி ஒரு முடிவுக்கு வந்த பின் தேவை இல்லாமல் திரும்பவும் இந்த பிரச்னையை பா ஜ க கிளப்புகிறது.   இது முழுக்க முழுக்க இந்துக்களின் வாக்கு வங்கியை குறி வைத்து எடுக்கப்படும் ஒரு நடவடிக்கை.   அதற்கு ரவிசங்கர் பயன்படுத்திக் கொள்ளப் படுகிறார்

ராமர் கோயில் பரஸ்பர ஒப்புதல் மூலமாகவோ அல்லது நீதிமன்ற உத்தரவுப் படியோ அமைக்க வேண்டும் எனில் பா ஜ க எதற்கு ரத யாத்திரையை தேர்தல் நேரத்தில் நடத்த வேண்டும்?   இப்போது மத்தியிலும்,  உ பி மாநிலத்திலும் ஆட்சி செய்வது பா ஜ க தான்.   அப்படி இருக்க அவர்கள் அயோத்யாவில் ராமர் கோயில் கட்டினால் யார் தடுப்பார்கள்?   இதெல்லாம் முழுக்க முழுக்க பிரச்னையை வளர்த்து இந்துக்களின் வாக்குகளை கைப்பற்ற மட்டுமே.: என கூறி உள்ளார்.