சமையல் கட்டுக்குள் ஓடிஒளிந்த சமந்தா எதிர்ப்பு நடிகை.. ரசிகர்கள் செம்ம கலாய்..

ல்லு அர்ஜூன் நடித்த ’அல வைகுந்த புரம்லூ’ தெலுங்கு படத்தில் கதாநாயகி யாக நடித்திருப்பவர் பூஜா ஹெக்டே. இவர் ’புட்ட பொம்மா.. ’பாடல் மூலம் பரபரப்பானார்.

இந்நிலையில் சமந்தா புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத் தில் வெளியிட்டு ’சமந்தா ஒன்றும் அவ்வளவு அழகில்லை’ என குறிப்பிட் டிருந்தார். இது சமந்தா ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியது. அவர்கள் பூஜாவை திட்டி தீர்த்ததுடன் சமந்தாவிடம் மன்னிப்புகேட்க வேண்டும் என்றனர். இந்த பிரச்னையை சமாளிக்க முடியாமல் பூஜா ஹெக்டே சமையல் கட்டுக்குள் ஓடி ஒளிந்து கொண்டதா சமந்தா ரசிகர்கள் நக்கல் செய்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக பூஜா, சமையல் அறையிலிருந்து கேரட் அல்வா, பீட்ஸா, பாம்பே ஸ்வீட் என வகைவகையாக இனிப்பு ஐட்டங்கள் செய்துகாட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இதைத்தான் சமந்தா ரசிகர்கள் செம்மயாக கலாய்த்து வருகின்றனர்.