பேஷன் டிசைனிங் தொழில் அதிபர் ஆன நடிகை சமந்தா..

மிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் நடிக்கிறார். தெலுங்கு நடிகர் நாக சைதன் யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். சமந்தாவுக்கு பேஷன் டிசைனிங் மீது அதிக ஈடுபாடு. தன்னு டைய உடைகளை டிசைன் செய்வதற்கு பிரத்யேகமாக பேஷன் டிசைனரை கூடவே வைத்திருக்கிறார். தற்போது அவரே பேஷன் டிசைனர் ஆகிவிட்டார். அத்துடன் பேஷன் டிசைனிங் நிறுவனம் தொடங்கி தொழில் அதிபர் ஆகி இருக்கிறார்.


தொழில் அதிபர் ஆனது குறித்து சமந்தா கூறும்போது.’பேஷன் டிசைன் மீது எனக்கு அதிக ஆர்வம். நடிகை ஆன பிறகு அதற்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம் பித்தேன். பேஷன் என்ற விஷயத்தை சினிமாவோடு நிறுத்தி விடாமல் நானே பேஷன் டிசைனிங் கற்று பெண்களுக்கான உடை வடிவமைப்பாளராக மாறி நீண்ட நாட்களாக ஆசைப்பட்டு வைத்திருந்தேன்.

 

பிரத்யேகமாக பேஷன் டிசைன் நிறுவனம் தொடங்கி உள்ளேன். இது எனது கனவு நனவாகி இருக்கிறது. என்று கூட சொல் லலாம். எனது தொழில் முயற்சியை எல்லோருடனும் சந்தோஷமாக பகிர்கி றோம்’ என்றார்.
சமந்தா அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் அடுத்து நடிக்கிறார்.