96 தெலுங்கு ரீமேக்கிற்குத் தயாராகும் சமந்தா……!

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வருடம் வெளியான ‘96’ படம் , வசூலை அள்ளி தந்தது. தமிழில் படம் வெளியாவதற்கு முன்பே படத்தின் தெலுங்கு உரிமையை வாங்கினார் தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு.

இந்த ரீமேக்கில் சர்வானந்த் நாயகனாகவும், சமந்தா நாயகியாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள். இந்த சூழலில் சர்வானந்த் ஒரு விபத்தில் சிக்கி ஆபரேஷன் செய்யும் அளவிற்கு பாதிப்புக்குள்ளானார். அதனால், படப்பிடிப்பு தள்ளிப் போனது.

ஆகஸ்ட் மாதம் முதல் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளதால் சமந்தா சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு அவர் தயாராகி வருவதாகவும் , அதில் உள்ள நுணுக்கங்களை முழுமையாகத் தெரிந்து கொண்டு அதற்கேற்றபடி நடிக்க ஆசை இருப்பதாகவும் சமந்தா கூறியுள்ளார்.

கார்ட்டூன் கேலரி