ஆட்டோ ஓட்டும் பெண்மணிக்கு தன்னுடைய சொந்த செலவில் கார் வாங்கி கொடுத்த நடிகை சமந்தா….!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சாம் ஜாம் என்ற தொலைக்காட்சி (TV Show) நிகழ்ச்சி ஒன்றில் பெண் ஆட்டோ ஓட்டுநர் கவிதா என்பவர் கலந்து கொண்டார். அவர் தனக்கு 7 சகோதரிகள் இருப்பதாகவும், தன்னுடைய பெற்றோர்கள் இறந்துவிட்டதால் குடும்பத்தைக் காப்பாற்ற தான் ஆட்டோ ஓட்டி வருவதாகவும் சமந்தாவிடம் தெரிவித்தார்.

மேலும் ஆட்டோ ஓட்டி அதன் மூலம் கிடைக்கும் வருமானம் தங்களின் வாழ்வாதாரத்திற்கு போதுமானதாக இல்லை என்றும் அந்த பெண் தெரிவித்தார்.

இந்நிலையில், அந்த பெண்ணுக்கு ரூ.12 லட்சம் மதிப்புள்ள கார் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார் நடிகை சமந்தா. இந்த செயலை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் (Social Media) பாராட்டு வருகின்றனர்.

அதை வைத்து டிராவல்ஸ் நடத்தினால் அதிகப்படியான வருமானம் பெறலாம் என்று அந்த பெண்மணிக்கு ஆலோசனை வழங்கினார்.