‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்திலிருந்து சமந்தா விலகிவிட்டாரா…?

 

நானும் ரெளடிதான்’ வெற்றியை தொடர்ந்து மறுபடியும் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்க முடிவெடுத்துள்ளார் விக்னேஷ் சிவன்.

லலித் குமார் மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

இந்தப் படத்துக்கு ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது .

விஜய் சேதுபதி ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் நடிப்பதாக காதலர் தினத்தன்று அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியானது.

இதனிடையே நேற்று (பிப்ரவரி 6) மாலை முதல் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்திலிருந்து சமந்தா விலகிவிட்டதாகத் தகவல் வெளியானது. மேலும், சமந்தா கர்ப்பமாகி இருப்பதுதான் காரணம் என்றும் சிலர் செய்திகளை வெளியிட்டனர்.

சமந்தா அதற்குப் பதிலளிக்காமல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மீண்டும் ஜிம்மில் இருக்கிறேன் என்று வெயிட் தூக்கும் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டார்.

மேலும், சமந்தா விலகியுள்ள செய்திக்கு ‘ படக்குழுவினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.