குழந்தை சமந்தா பழைய நினைவுகள்.. வெவ்வேறு திசையில் வளர்ந்த பிள்ளைகள்..

டிகை சமந்தா இணைய தள பக்கத்தில் எப்பவுமே பிஸிதான். தான் குழந்தையாக இருந்தபோதுள்ள குடும்ப படத்தையும் உடன்பிறந்தவார்கள் படத்தையும் வெளியிட்டு,’நாங்கள் வெவ்வேறு திசைகளில் வளர்ந்தோம், ஆனாலும் எங்கள் வேர் ஒன்றுதான்.. எல்லோரையும் மிஸ் செய்கிறேன்’ என உருக்கமுடன் குறிப்பிட்டிருக்கிறார்.


நடிகை சமந்தா கடைசியாக ’ஜானு’ தெலுங்கு படத்தில் நடித்தார், இப்படம் தமிழில் விஜய்சேதுபதி, திரிஷா நடித்த 93 படத்தின் ரீமேக் ஆகும். அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் ’காத்துவாக்குல் ரெண்டு காதல்’ படத்தில் விஜய்சேதுபதி. நயன்தாரவுடன் சேர்ந்து நடிக்கிறார். கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.