அனுஷ்காவுக்கு தெலுங்கில் நல்ல மார்க்கெட்டை பெற்று தந்த ருத்ரமாதேவி படத்தை டைரக்டு செய்தவர், குணசேகர்.

அவர் காளிதாசர் எழுதிய ‘சாகுந்தலம்’ கதையை தழுவி, அதே பெயரில் புதிய படம் இயக்குகிறார்.

சகுந்தலையாக சமந்தா நடிக்கிறார்.

அவருக்கு ஜோடியாக துஷ்யந்த், மகாராஜா கேரக்டரில் மலையாள நடிகர் தேவ் மோகன் நடிக்கிறார்.

பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்துக்கு மணிசர்மா இசை அமைக்கிறார்.

சரித்திரப்படம் என்பதால், மன்னர் காலத்தை கண் முன் நினைவுக்கு கொண்டு வரும் வகையில் பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்படுகிறது.

– பா. பாரதி