ஸ்பைடர்மேன் ஆன சமந்தா.. நெட்டில் பரபரக்கும் மீம்ஸ்..

டிகை சமந்தா கொரோனா ஊரடங்கில் தோட்டவேலை, செல்ல நாயுடன் கொஞ்சல், நீச்சல் என நேரத்தை செலவழித்து பொழுதை போக்கிக் கொண்டிருந்தார். தற்போது கிரியா யோகாவில் கவனம் செலுத்தி வருகிறார். அதற்காக பிரத்யேக பயிற்சியாளர் வீட்டுக்கு வந்து யோகா பயிற்சி அளிக்கிறார்.


கஷ்டம் பாராமல் யோகா செய்து வித்தியாசமான போஸ்களை சமந்தா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் அவர் கைகளை தரையில் ஊன்றி உடலை அலெக்காக தூக்கியபடி செய்த கடினமான பயிற்சியை புகைப் படமாக வெளியிட்டார். அவரது முயற்சிக்கு பாராட்டு கிடைத்த நிலை யில் ஒரு சிலர் அந்த போஸை அப்படியே ஹாலிவுட் படம் ஸ்பைடர்மேன் உடன் ஒப்பிட்டு மீம்ஸ் பகிர்ந்திருக்கின்றனர். அது இப்பொழுது நெட்டில் வைரலாகி வருகிறது.
இந்த மீம்ஸை பகிர்ந்திருக்கும் சமந்தா, ”மற்றவர்களை பார்த்து சிரிக்கும் பொழுது, நம்மை பார்த்தும் சிரித்துகொள்ள தெரிய வேண்டும்’ என தத்துவம் உதிர்த்திருக்கிறார்’