சமந்தாவை நடுங்க வைத்த பெண் இயக்குனர்..

--

டிகை சமந்தா, நாக சவுரியா நடித்த படம் ஒ!பேபி. தெலுங்கில் உருவான இப்படத்தை சமந்தாவின் தோழி டைரக்டர் நந்தினி ரெட்டி இயக்கினார். இப்படம் வெளியாகி இன்றுடன் 1 வருடம் ஆகிறது. படத்தின் ஒரு வருட நினைவை பகிர்ந்திருக்கிறார் சமந்தா. அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:


நான் நடுக்கத்துக்குள்ளாகி இன்றுடன் ஒரு வருடம் ஆகிறது.. இன்று நாள் முழுவதும் மகிழ்ச்சியாக கொண்டாடுவேன். கடந்த 2019 ஜூலை 5ம் தேதி ஒ பேபி படம் வெளியானது. அன்றைய தினம், பட இயக்குனர் நந்தினி ரெட்டிக்கு படத்தை பற்றிய எனக்கு வந்த எதிர்மறை விமர்ச னங்களையே தொடர்ச்சியாக அனுப்பிக் கொண்டிருந்தேன். நான் அப்படித்தான்.. ஒரு கட்டத்தில் என்னை அன்றைக்கு நந்தினி அன்பிரண்டு செய்து விடுவார் என்றுகூட நினைத்தேன். அதற்காக நந்தினி யிடம் இன்று மன்னிப்பு கேட்கிறேன். அப்படம் வெற்றிபெற்றது. நான் நடித்த படங்களிலிலேயே மனம் நிறைய பெருமை கொண்ட படமாக ஓ பேபி எனக்கு அமைந்தது. அதற்காக நந்தினி ரெட்டிக்கு நன்றி’ என குறிப்பிட்டிருப்ப துடன் ரசிகர்கள் ஒ பேபி படத்தை வைத்து ரசிகர்கள் ஒரு வருட கொண்டாட்டத்துக் காக வெளியிட்ட போஸ்டரையும் பகிர்ந்திருக்கிறார் சமந்தா.