சமந்தாவுடன் இருந்த தோழிக்கு கொரோனா தொற்று உறுதி.. நடிகைக்கும் டெஸ்ட் எடுக்கப்படும்?

கொரோனா ஊரடங்கால் சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவுடன் தனிமையில் பொழுதை கழித்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் காஸ்டியும் டிசைனரும் நெருங்கிய தோழியுமான ஷில்பா ரெட்டியுடம் ஜாலியாக பொழுதை கழித்தாக சமந்தா இன்ஸ்டாகிராமில் இருவருக் கட்டிப் பிடித்திருப்பதுபோல் புகைப்படம் பகிர்ந்தார்.


யாருக்கு எந்த நேர்ததில் கொரோனா ஏற்படும் என்று கணிக்க முடியாத நிலையில் ஷில்பா ரெட்டி தற்போது ஒரு வீடியோ வெளியிட்டுள் ளார். அதில் தனக்கு கொரோனா தொற்று டெஸ்ட் எடுத்ததில் தொற்று இருப்பதாக உறுதியானது என தெரிவித்திருக்கிறார். இது சமந்தா, நாக சைதன்யா மற்றும் அவர்களது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஷில்பா ரெட்டியுடன் பழகியதாக சமந்தா தெரிவித்திருந்ததால் அவருக்கும் கொரோனா டெஸ்ட் எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.