டில்லி

டந்த 2000 ஆம் ஆண்டின் பாதுகாப்பு ஒப்பந்த ஊழல் வழக்கில் சமதா கட்சியின் முன்னாள் தலைவர் ஜெயா ஜெட்லிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்  8 ஆம் தேதி அன்று செய்தி ஊடகமான தெகல்கா ஒரு அதிரடி நடவடிக்கையை எடுத்தது.   அந்த நடவடிக்கையில் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெர்மல் இமேஜர்ஸ் வாங்குவது குறித்துப் போடப்பட்ட ஒப்பந்தத்தில் சமதா கட்சி தலைவர் ஜெயா ஜெட்லி ரூ.2 லட்சம் லஞ்சம் பெற்றது வெளியானது.   இந்த பணத்தை அவருக்கு மேத்யூ சாமுவேல் என்பவர் அளித்துள்ளார்.  மேத்யூ சாமுவேல்  எந்த ஒரு நிறுவனத்தையும் நடத்தாமல் ஒப்பந்தம் பெற்றுள்ளார்.

அப்போது பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த மறைந்த ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் வீட்டில் ஜெயா ஜெட்லி வசித்துவந்தார்.   இந்த விவகாரத்தைத் தொடர்ந்து ஜெயா ஜெட்லி தனது சமதா கட்சித் தலைவர் பதவியை 2002 ஆம் ஆண்டு ராஜினாமா செய்தர்.  சிபிஐ இது குறித்து வழக்கு தொடர்ந்து அதில் முக்கிய குற்றவாளிகளாக ஜெயா ஜெட்லி, சமதா கட்சி மூத்த தலைவர் கோபால் பச்சேர்வால் , முன்னாள் ராண்வ மேஜர் முர்கய் உள்ளிட்டோர் இணைக்கப்பட்டனர்.

இந்த வழக்கின் தீர்ப்பு சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று  சிபிஐ நீதிமன்றம் அளித்தது.  இந்த தீர்ப்பில், “அரசின் பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பாக ஒரு கற்பனை நிறுவனத்தை உருவாக்கி மேத்யூ சாமுவேல் என்பவரிடம் ரு.2 லடச்ம லஞ்சம் பெற்றதை ஜெயா ஜெட்லி ஒப்புக் கொண்டுள்ளார்.  எனவே விசாரணையில் ஊழல் குற்றம் நிரூபிக்கப்படுள்ள்து.

ஆகையால் ஜெயா ஜெட்லி, கோபால் பச்சேர்வால், முர்கய் ஆகிய மூவருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது.  தண்டனை பெற்றுள்ள மூவரும் உடனடியாக நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது