சமந்தா தோழி கொரோனாவிலிருந்து குணமானது எப்படி?

கொரோனா ஊரடங்கில் கணவருடன் ஐதராபாத் இல்லத்தில் வசித்து வருகிறார் சமந்தா. சமீபத்தில் இவரது தோழியும், காஸ்டியும் டிசைனருமான சில்பா ரெட்டிக்கு கொரோனா டெஸ்ட் எடுத்தபோது பாசிடிவ் என வந்தது. அவரது கணவருக்கும் தொற்று இருந்தது. கணவன், மனைவி இருவரும் தங்களைத்தாங்களே தன்மைப்படுத்திக் கொண்டனர். 14 நாட்கள் தனிமைப்படுத் தலில் இருந்து சிகிச்சை பிறகு நலமடைந் தார்கள்.

கொரோனா அனுபவம் பற்றி சில்பா தனது இணைய தள பக்கத்தில் தெரிவித்திருக் கிறார்.
சி வைட்டமின் மாத்திரைகள். புரோபயாட்டிக் காஸ்யூல் சாப்பிட்டது. வெயிலில் நின்றது வெதுவெதுப் பான நீர் உட்கொண்டது. துளசி நீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் கலந்துஎடுத் துக்கொண்டது. உங்கள் வாய் வழியாக 20-25 முறை சுவாசிக்கவும் . யோகாசனம், பிராணயாமம் செய்ய வேண்டும்.
இவ்வாறு பல்வேறு நடைமுறைகளை கையாண்டு கொரோனாவி லிருந்து குணம் அடைந்ததை தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் விளக்கமாக குறிப்பிட்டிருக்கிறார் சில்பா ரெட்டி.