சென்னை:

ரும் 15ந்தேதி தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதை  முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பொங்கல் விழா களைகட்டி வருகிறது.

சென்னையில் உள்ள சர்மாநகர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் இன்று பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப் பட்டது. பள்ளி ஆசிரியர்கள், அலுவலக உதவியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், பள்ளி மாணவ மாணவிகள் உள்பட அனைவரும் ஒன்றிணைந்து பொங்கல் விழாவை சிறப்பித்தனர்.

பொங்கல் விழாவை முன்னிட்டு,  பள்ளி  முழுவதும் வண்ணக் கோலங்கள் வரைந்து அலங்கரிக்கபட்டிருந்தது.  காலை 10 மணி அளவில் விவசாய பெருமக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது போல, பாரம்பரிய முறையில் கரும்பு, மஞ்சள் குலை, காய்கறிக் கொண்டு படையலிட்டு, வண்ணம் பூசிய மண் பானையில் பள்ளி வளாகத்தில் சர்க்கரை பொங்கலிடப்பட்டது.

பொங்கல் பொங்கி வரும் சமயத்தில், பள்ளிக்குழந்தைகள் பொங்கலோ பொங்கல் என்று விண்ணுயர சத்தமிட்டு தங்களது மகிழ்ச்சியை கொண்டாடினர்.

அதைத்தொடர்ந்து பள்ளியில், பொங்கலை  வரவேற்கும் விதமான ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதை ஆசிரியர்கள் மட்டுமின்றி, பள்ளிக்குழந்தைகளின் பெற்றோர்கள் ஏராளமானோர் வருகை தந்து, பொங்கல் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

‘அதைத்தொடர்ந்து பொங்கல் விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சர்மாநகர் தொடக்கப்பள்ளி தலைமைஆசிரியை பாமா மற்றும் ஆசிரியைகள் செய்திருந்தனர்.

இதுபோல தமிழகம் முழுவதும் பல  பள்ளிகளில் பொங்கல் விழா உற்சாகத்துடன் கொண்டாட்டப்பட்டு வருகிறது.