திருச்சி:

 சமயபுரம் மாரியம்மன் கோவில் யானை மசினியின் மதத்துக்கு யானை பாகன் நேற்று கோவிலுனுள் பலியான நிலையில், கோவில் நடை அடைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, நேற்று இரவு கோவில் சுத்தம் செய்யப்பட்டது. இன்று அதிகாலை  விசேஷ பூஜைகள் நடைபெற்று, புனித நீர் தெளிக்கப்பட்டு இன்று காலை 10 மணி அளவில்  கோவிலில் நடை மீண்டும் திறக்கப்பட்டது.

திருச்சி அருகே உள்ள சமயபுரம் மாரியமம்மன் மிகவும் பிரசித்த பெற்ற அம்பாள் ஸ்தலமாகம். இங்கு மசினி என்ற யானை பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தது.  இந்த யானைக்கு நேற்று திடீரென மதம் பிடித்தது. இதன் காரணமாக அந்த யானையின் பாகன் கஜேந்திரன் என்பவரை யானை மிதித்து கொன்றது.

அதைத்தொடர்ந்து கோவில் நடை சாத்தப்பட்டது. யானை கோவிலில் இருந்து நேற்று மாலை  வெளியேற்றப்பட்டு வழக்கமான இடத்தில் கட்டி வைக்கப்பட்டது.

பின்னர் கோவில் கழுவி சுத்தம் செய்யப்பட்டது.  அதன்பிறகு ஆக ஆகம விதிகளின் படி புனிதநீர் தெளிக்கப்பட்டு, பரிகார பூஜைகள் மேற்கொண்ட பின் இன்று  காலை 10 மணிக்கு  நடை திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.