சமயபுரம் மாரியம்மன் மலேசியா போய்விட்டாள்!: கோயிலை அகற்றினால் அந்நாடு அழியும்!: கோமண சுவாமிகள் எச்சரிக்கை ஆடியோ

லேசியாவில் உள்ள மாரியம்மன் கோயிலை அகற்றினால் அந்நாடு அழியும் என்று கோமண சுவாமி என்பவர் விடுத்துள்ள எச்சரிக்கை ஆடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மலேசிய நாட்டின் செலங்கோர் மாநிலத்தில் உள்ள சுபாங் ஜெயா பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீமஹா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது இது 127 ஆண்டுகள் பழமையானது.

இந்த கோவிலை வேறு இடத்துக்கு மாற்றுமாறும் அதற்கான  இழப்பீட்டு தொகை அளிக்க தயாராக உள்ளதாகவும் அப்பகுதியில் உள்ள பிரபல தனியார் நிறுவனம் ஒன்று வலியுறுத்தி இருந்தது. இதுகுறித்து அந்நாட்டு நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தது.

கோமண சுவாமிகள்

இந்நிலையில், நேற்று காலை ஸ்ரீமஹா முத்து மாரியம்மன் கோவில் பக்தர்கள் வழிபாடு செய்துகொண்டிருந்தபோது கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் உள்ளே நுழைந்தது.

மலேசய மாரியம்மன் கோயில்

பூர்வீக மலாய் மக்களான அவர்கள் கோவிலுக்குள் இருந்த அனைவரையும் உடனடியாக வெளியேறும்படி மிரட்டினர். மேலும்  பக்தர்கள் மீது கண்மூடித்தனமாக  தாக்குதல் நடத்தினர். இதில் பக்தர்கள் சிலர் படுகாயம் அடைந்தனர்.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் வடுவூரில் வசிக்கும் கோமண சாமி என்கிற ராமதாஸ் என்பவர், ஒரு ஆடியோவை வெளியிட்டுள்ளார்.

கலவரம்

“கோமண சாமி என்கிற ராமதாஸ் சுவாமிகள் பேசுகிறேன்.. “ என்று துவங்கும் அந்த ஆடியோவில், “மலேசிய மாரியம்மன் கோயிலை அகற்ற முயன்றால் அந்நாடு அழியும். சமயபுரம் மாரியம்மன் மலேசயா சென்றுவிட்டாள். உரிய பரிகாரம் செய்து மாரியம்மனை சாந்தப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் மலேசிய நாடே அழிந்துவிடும் ” என்று அந்த ஆடியோவில்  எச்சரித்துள்ளார்.

அந்த ஆடியோ..