சம்பா சாகுபடி: 16ஆம் தேதி கல்லணை திறக்கப்படுவதாக அறிவிப்பு

திருச்சி:

சம்பா சாகுபடிக்காக, வரும், 16 ஆம் தேதி கல்லணை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில்,சம்பா சாகுபடிக்காக திருச்சி அருகே உள்ள கல்லணையில் இருந்து வரும் 16ந்தேதி (நாளை மறுதினம்) தண்ணீர் திறக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.

மேட்டூருக்கு கடந்த 15 நாட்களாக காவிரி நீர்வரத்து அதிகமாக உள்ள நிலையில், மேட்டுர் அணையில் இருந்து நேற்று முதல்  டெல்டா மாவட்ட பாசனத்திற்காக திறக்கப்பட்டது.  இந்த நீர் கல்லணை வந்ததை அடுத்து,  வரும் 16ந்தேதி கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

இதன் மூலம் தஞ்சை, திருவாருர், நாகை, புதுக்கோட்டை, மாவட்டங்களில் சுமார் 10 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பயனடையும் என்று கூறப்பட்டுள்ளது.