தொலை தொடர்பு துறைக்கும் பீடி சிகரெட்டுக்கும் ஒரே வரியா ? ஏர்டெல் அதிபர் கண்டனம்

டில்லி

தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு பீடி, சிகரெட் போன்ற பொருட்களுக்கு இணையாக வரி விதிப்பதற்கு ஏர்டெல் அதிபர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டில்லியில் நடந்த இந்திய மொபைல் காங்கிரஸ் என்னும் நிகழ்வில் நேற்று ஜியோ, பாரதி ஏர்டெல் உள்ளிட்ட பல மொபைல் சேவை அளிக்கும் நிறுவனங்களின் அதிபர்கள் கலந்துக் கொண்டனர். விரைவில் ஜியோவின் பிராட் பாண்ட் சேவை தொடங்கும் என ஜியோ அதிபர் அம்பானி அறிவித்தார்.

அந்த கூட்டத்தில் பேசிய பாரதி ஏர்டெல் அதிபர் சுனில் மிட்டல், “தொலை தொடர்பு நிறுவனங்கள் தற்போது போட்டியால் கட்டணக் குறைப்பு மற்றும் புதிய தொழில் நுட்பம் ஆகியவற்றால் கடும் நட்டத்தில் உள்ளன. இந்த விதத்தில் ஏர்டெல் நிறுவனமும் நட்டத்தை சந்தித்து வருகின்றது. இதற்கு மற்றொரு காரணம் அதிகபட்ச வரி ஆகும்.

தொலை தொட்ர்பு நிறுவனங்களுக்கு கிடைக்கும் ஒவ்வொரு 190 ரூபாயிலும் சுமார் 37 ரூபாய் வரியாக அரசுக்கு போய் விடுகிறது. பீடி, சிகரெட் போன்ற புகையிலை பொருட்களுக்கும் நாட்டின் முக்கிய தேவையான தொலை தொடர்புக்கும் ஒரே விகிதத்தில் ஜி எஸ் டி விதிக்கப்படுகிறது. ஜி எஸ் டியில் அதிகபட்சமான 18% வரி வசுலிக்கப்படுகிறது.

டிஜிடல் இந்தியாவை பிரதமர் தனது நோக்கமாக தெரிவித்து வருகிறார். அதே நேரத்தில் அலைவரிசை மற்றும் உரிமக் கட்டணங்கள் மிகவும் அதிகமாக உள்ளன. தொலை தொடர்புத் துறையில் வெளிநாட்டு முதலீடாக வர இருந்த 5000 கோடி டாலர் இதனால் வரவில்லை. அத்துடன் வேலை இழப்பும் ஏற்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி