டில்லி

ந்த வருடம் மே மாதம் 6 ஆம் தேதி நடைபெறும் நீட் பொது நுழைவுத் தேர்வில் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 11 மொழிகளிலும் ஒரே வினாக்கள் மட்டும் இடம்பெறும் என மத்திய அமைச்சர் கூறி உள்ளார்.

இந்த வருடத்துக்கான நீட் தேர்வு வரும் மே மாதம் 6ஆம் தேதி நடைபெறும் என அற்விக்கப்பட்டுள்ளது.   இந்த தேர்வில் மத்திய பாட திட்டங்களான என் சி இ ஆர் டி,  சி பி எஸ் சி மற்றும் மாநில கல்வி வாரியங்களின் பாடத்திட்டங்கள் உள்ளிட்ட அனைத்து திட்டங்களின் அடிப்படையில் கேள்வி கேட்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் மாதம் 9ஆம் தேதி என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தேர்வு குறித்து மத்திய மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தனது டிவிட்டர் பக்கத்தில், “நீட் தேர்வில்  இந்த ஆண்டு முதல் உருது மொழியிலும் வினாத்தாள்கள் வழங்கப்பட உள்ளது.

அத்துடன், ஆங்கிலம், உட்பட மற்ற மொழிகளிலும் வினாத்தாள்கள் வழங்கப் பட உள்ளது.

அனைத்து மொழி வினாத்தாட்களிலும் ஒரே வினாக்களே இடம்பெறும்

இந்த தேர்வில் 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். ”  என அறிவித்துள்ளார்.