“அந்தக் கதையை எடுக்கக்கூடாது!” : இயக்குநர்  மிஷ்கினுக்கு நீதிமன்றம் தடை

ஒருவருடன் ஒப்பந்தம் செய்துவிட்டு அதே கதையை வேறு ஒருவருக்கு எடுக்கக்கூடாது என்று பிரபல இக்குநர் மிஷ்கினுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கேப்டன் பிரபாகரன், சின்னகவுண்டர் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு நிதி உதவி செய்த பைனான்சியர் ரகுநந்தன். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர், “என் மகனை வைத்து க்ரைம் த்ரில்லர் படம் ஒன்றை எடுக்க இயக்குனர் மிஷ்கினுடன்  கடந்த 2015ம் ஆண்டு ஒப்பந்தம் செய்துகொண்டேன்.

இதற்காக, இயக்குனர் மிஷ்கினுக்கு 1 கோடி ரூபாய் முன்பணம்  அளித்தேன். ஒப்பந்தப்படி படத்தை எடுத்து 2016 ஏப்ரலில்  வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் அவர் ஒப்பந்தப்படி செயல்படவில்லை. தவிர அதே கதையை பயன்படுத்தி  வேறு  படம் எடுத்து வருகிறார். ஆகவே அந்த படத்தை எடுக்க மிஷ்கினுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜ், மனுதாரரிடம் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள கதையின் அடிப்படையில், வேறு  திரைப்படத்தை இயக்கி வெளியிட இயக்குனர் மிஷ்கினுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

மேலும் ஜனவரி 2-ம் தேதிக்குள் மனு குறித்து இயக்குனர் மிஷ்கின் பதிலளிக்க வேண்டும் எனவும்  உத்தரவு பிறப்பித்தார்.

 

 

கார்ட்டூன் கேலரி