நாடு முழுவதும் ஒரே மாதிரியான நீட் தேர்வு…சிபிஎஸ்இ உறுதி

டில்லி:

அடுத்த ஆண்டு முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான நீட் தேர்வு நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ. உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கடந்த முறை நடந்த நீட் தேர்வில் குளறுபடி அதிகளவில் இருந்தது என குற்றச்சாட்டுகள் எழுந்தன. பிற மாநிலத்தில் வழங்கப்பட்ட வினா த்தாள்கள் எளிமையாக இருந்தது என்றும், தமிழகத்தில் கடினமாக இருந்தது என்றும் கூறப்பட்டன.

இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து குளறுபடி இல்லாமல் தேர்வு நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ. உறுதியளித்தது.

வருகிற 2018ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வினாத் தாள்கள் பயன்படுத்தப்படும் என்று சிபிஎஸ்இ எழுத்துப்பூர்வ அறிக்கையை தாக்கல் செய்தது.