பெண் குழந்தைக்கு தாயானார் சமீரா ரெட்டி…!

” வாரணம் ஆயிரம் ” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பரிச்சயமானவர் சமீரா ரெட்டி . தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்துவந்த சமீரா கடந்த 2014 ஆம் ஆண்டு அக்ஷய் என்ற தொழிளதிபரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு 2015-ல் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் மீண்டும் தான் கர்ப்பமாக இருப்பதாக இந்த வருட துவக்கத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் அறிவித்தார் சமீரா.

சமீபத்தில் கூட நிறைமாத கர்ப்பிணியாக தண்ணீருக்குள் ஃபோட்டோ ஷூட் நடத்தியிருந்தார்.

இந்நிலையில் நேற்று காலையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் கையை படம் பிடித்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கும் சமீரா, “என்னுடைய குட்டி தேவதை, இன்று காலையில் வந்தாள். உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆசிர்வாதத்திற்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி