கடந்த வருடம் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், கடந்த 2020-ம் ஆண்டு இறுதியில் ஓரளவு கட்டுக்குள் வந்தது. இதனால் கொரோனா ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டது.

நிலைமை சரியாகிவிட்டது என நினைக்கும் தருவாயில் கொரோனாவின் இரண்டாம் அலை கோரத்தாண்டவம் மீண்டும் தொடங்கி விட்டது. போன முறையை விட இந்த முறை அதி வேகமாக பரவி வருகிறது கொரோனா.

இந்நிலையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கிறார் சமீரா ரெட்டி. அவருக்கு மட்டும் அல்ல சமீராவின் கணவர் அக்ஷய் வர்தே, மகன் ஹன்ஸ், மகள் நைராவுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

தன் பிள்ளைகளின் புகைப்படத்தை இன்ஸ்டாகிாரமில் வெளியிட்டு சமீரா கூறியிருப்பதாவது,

ஹன்ஸ் மற்றும் நைரா பற்றி பலர் கேட்கிறார்கள். அதனால் இதோ அப்டேட். கடந்த வாரம் ஹன்ஸுக்கு பயங்கர காய்ச்சல், தலைவலி, உடம்பு வலி, வயிற்றுப் போக்கு, சோர்வு இருந்தது. நான்கு நாட்கள் அப்படி இருந்தது. இதையடுத்து பரிசோதனை செய்தபோது தான் அவருக்கு கோவிட் 19 பாசிட்டிவ் என்று வந்தது.

ஹன்ஸை அடுத்து நைராவுக்கு அறிகுறிகள் ஏற்பட்டது. அவளுக்கு காய்ச்சலும், வயிற்றுப் போக்குமாக இருந்தது. பாரசிட்டமால் கொடுத்தேன். வைட்டமின் சி, மல்டிவைட்டமினை டாக்டர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.

என் பிள்ளைகள் சவுகரியமாக உணரத் தேவையான அனைத்தையும் செய்தேன். தற்போது அவர்கள் நன்றாக இருக்கிறார்கள். சில நாட்களில் குழந்தைகளுக்கு அறிகுறிகள் இல்லாமல் போனாலும் இதுவரை பாதிப்பு ஏற்படாமல் இருப்பவர்களுக்கு பரவாமல் இருக்க அவர்களை 14 நாட்கள் தனிமைபை்படுத்த வேண்டும்.