ரஜினி ஸ்டைலில் அசத்தும்  நடிகையின் குழந்தை.. 

ரஜினி ஸ்டைலில் அசத்தும்  நடிகையின் குழந்தை..

பிரபல நடிகை சமீரா ரெட்டியின் 10 மாத பெண் குழந்தை, நைரா.

ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கிக் கிடக்கும் சமீரா, தன் மகளுக்கு, தானே முடி வெட்டி அதனை ‘இன்ஸ்டாகிராமில்’’ சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார்.

அமோக வரவேற்பு.

இப்போது குழந்தை நைரா, ரஜினி ஸ்டெயிலில் கருப்பு கண்ணாடி அணிந்து போஸ் கொடுக்கும் மற்றொரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

அந்த பிஞ்சு குழந்தை ரஜினியைப் போல், கண்ணாடியில் கை வைத்து போஸ் கொடுப்பது, நெஞ்சை அள்ளும் ரகம்.

அந்த வீடியோவுக்கு சமீரா ரெட்டி கொடுத்திருக்கும் தலைப்பு, அற்புதம்.

என்ன தலைப்பு?

’’..மாஸ் பேபி # பேபி தலைவா # ரஜினிகாந்த் # சூப்பர் ஸ்டார் # சும்மா பேர கேட்டா அதிருதில்ல # ‘

 இந்த தலைப்பும், குழந்தையின் ரஜினி ஸ்டெயில் போசும் .ஏகப்பட்ட லைக்ஸ்களை அள்ளியுள்ளது.

– ஏழுமலை வெங்கடேசன்