தனது குழந்தைகள் செய்யும் ஜாலி சேட்டைகளை வீடியோவாக சமூக வலைதளத்தில் பகிர்ந்து வரும் சமீரா….!

“வாரணம் ஆயிரம் ” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பரிச்சயமானவர் சமீரா ரெட்டி . தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்துவந்த சமீரா கடந்த 2014 ஆம் ஆண்டு அக்ஷய் என்ற தொழிளதிபரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு 2015-ல் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் மீண்டும் தான் கர்ப்பமாக இருப்பதாக இந்த வருட துவக்கத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் அறிவித்தார் சமீரா.”நைரா” எனும் பெண் குழந்தை பிறந்தது .

இந்நிலையில் அவரின் மகளும் மகனும் செய்யும் சேட்டைல்களை சமீரா வீடியோ எடுத்து தன் இன்ஸ்ட்டாகிராமில் பதிவிட்டு வருகிறார் .

கொரோனா லாக்டவுன் சமயத்தில் இந்த வீடியோவை பார்த்தது கவலை மறந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது என பலர் அதற்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.