பஞ்சாபி பாடகரை திருமணம் செய்த நடிகை சமிக்ஷா….!

புரி ஜெகன்நாத்தின் 143 தெலுங்கு படம் மூலம் நடிகையானவர் சமிக்ஷா. ஆர்யா, நவ்தீப் உள்ளிட்டோர் நடித்த அறிந்தும் அறியாமலும் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

தமிழ் , தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி என பல மொழி படங்களில் நடித்து வந்த சமிக்ஷாவின் கடைசி படம் பிரணாம்(2019). இது தவிர்த்து இந்தி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார்.

இந்நிலையில் சமிக்ஷாவுக்கும், சிங்கப்பூரை சேர்ந்த தொழில் அதிபரும், பாடகருமான சயீல் ஆஸ்வாலுக்கும் கடந்த 3ம் தேதி திருமணம் நடைபெற்றது. இது இருவருக்குமே இரண்டாவது திருமணம் ஆகும்.

திருமணம் குறித்து சமிக்ஷா ஜூலை 3ம் தேதி எங்கள் இருவருக்குமே ஸ்பெஷல் ஆகும். ஆஸ்வாலின் தந்தை கடந்த 2016ம் ஆண்டு இறந்து விட்டார். அவரின் பிறந்தநாள் ஜூலை 3ம் தேதி ஆகும். அந்த நாளில் தான் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். சிங்கப்பூரில் இருக்கும் குருத்வாரா ஒன்றில் எங்களின் திருமணம் எளிமையாக நடந்தது என கூறியுள்ளார் .