சாமி. நாகப்ப படையாச்சி : சுதந்திர போராட்ட வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்ட தமிழர்

சாமி. நாகப்ப படையாச்சி

சுதந்திரப்போராட்டத்தில் தமிழகத்திலிருந்து பங்கெடுத்து இருட்டடிப்பு செய்யப்பட்டவர் நாகப்பன் படையாச்சி. தனது 18-வது வயதில் சுதந்திர தாகத்திற்காக உயிர்விட்டவர்.

ஏறத்தாழ, தேசத்தந்தை காந்தியுடன் போராட்ட களத்தில் நின்று முதல்பலியான தமிழர் !பின்னாளில், காந்தி அவர்களின் இந்திய சுதந்திர வேட்கையின் நெருப்புப்பொறியாகவும் இவர் விளங்கினார் என்பதும் வரலாறு.

புலம்பெயர்ந்த நாட்டில் ஆப்ரிக்க மண்ணில் சுதந்திரத்திற்காக உயிர் துறந்தவர் மயிலாடுதுறையைச்சேர்ந்த நாகப்பன் படையாச்சி அவர்களின் நினைவுதினம் இன்று. சாமி. நாகப்ப படையாட்சி பிறந்த ஊரான மயிலாடுதுறையில் இவருக்கு சிலை நிறுவும் பனி தற்போது முடியும் நிலையில் உள்ளது.

18 வயதில் பஞ்சம் பிழைக்க போன தேசத்திலும் காந்தியின் உந்துதலால் சுதந்திர வேட்கைக்காக களம் இறங்கியவர் நாகப்பன் படையாச்சியின் சேவையை, தியாகத்தை  போற்றி அந்நாடு அவருக்கு சிலை வைத்துள்ளது.

நெல்சன் மாண்டேலே போன்ற பெரும் தலைவர்களுக்கு இவரைப்போன்றவர்கள் மிகப் பெரிய உந்து சக்தியாக இருந்திருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது.

சுதந்திர போராட்டத்திருக்காக உயிர்த்தியாகம் செய்த சாமி.நாகப்ப படையாட்சியின்  வீர மரண வரலாறு மற்றும் மகாத்மா காந்தியால் புகழப்பட்ட ஆதாரங்கள், ஜூலை 6 ல் சாமி.நாகப்ப படையாட்சியின் 111 ம் ஆண்டு நினைவு நாளில் நினைவுகூர்வோம்.

11.09.1906.ல் தென் ஆப்பிரிக்கா  ஜொகனஸ்பர்க் நகரில் இந்திய வம்சாவழியினருக்கு எதிரான கைரேகை பதிவு சட்டம், திருமணங்கள் சட்டபடி செல்லாது என்கிற சட்டத்தை, எதிர்த்து அகிம்சை வழியில் அறவழி போராட்டம் நடத்தி சட்டத்தை மீற வேண்டும், அதற்குரிய தண்டனையை ஏற்க வேண்டும் என்று மகாத்மா காந்தியன் வடிவமைப்பில் உருவானது முதல் போராட்டம்.

21.06.1909.ல்.சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்ற காரணத்தால் சாமி.நாகப்ப படையாட்சி கைது செய்யப்பட்டு, தண்டத் தொகையைக் கட்டாமல் சிறை தண்டனையை ஏற்பதே சத்தியாகிரகப் போராட்டம் என்பதால் சிறைக்கு சென்றார். 26 கி.மீ.தொலைவில் உள்ள சுகஸ்கெய் சாலை சிறைமுகாமிற்கு நடத்தியே அழைத்து செல்லப்பட்டார். பிறகு சிறை அதிகாரிகளால் தாக்கப்பட்டு, கடும் குளிரில் திறந்த வெளி கூடாரத்தில், சரியான உணவு இல்லாமல் கொடுமை படுத்தியதால் 06.07.1909 அன்று சாமி.நாகப்ப படையாட்சி மரணத்தை தழுவி உயிர் தியாகம் செய்தார்.

18.07.1914.ல் மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவின் ஜொகனஸ்பர்-நகரில் பிரேம் ஃபோன் டெய்ன் கல்லறைத் தோட்டத்தில் சாமி .நாகப்ப படையாட்சி நினைவிடத்தை திறந்து வைத்தார்.

மகாத்மா காந்தியின் சத்தியாகிரப் போராட்டத்தில் உயிர் நீத்த முதல் மயிலாடுதுறை. தியாகி.சாமி.நாகப்ப படையாட்சியின் வீர மரணம் காந்தியின் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. தென் ஆப்பிரிக்காவில் காந்தியின் எழுத்தும் பேச்சும் இந்தியன் ஒப்பீனியனில் தொடர்ந்து வெளியானது.

14.12.1909 அன்று இந்தியன் ஒப்பீனியனில் மகாத்மா காந்தி, தனது மகன் சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்று முதன்முதலாக சிறை சென்றது, தியாகி.சாமி நாகப்ப படையாட்சி தியாகத்தோடு ஒப்பிட்டால் தனது மகனின் சிறைவாசம் பெரிதல்ல, என காந்தி எழுதினார்.

06.10.1909 அன்று மகாத்மா காந்தி, போலக் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் சாமி .நாகப்ப படையாட்சி நிழற்படம் கிடைத்ததைக் குறிப்பிட்டு, சென்னையில் வெளிவரும் பத்திரிக்கைகளில் வெளியிட வேண்டும் என்று காந்தி அறிவித்தார்.

09.12.1911 மற்றும் 14.6.1912  தேதிகளில் இந்தியன் ஒப்பீனியன் பத்திரிக்கையில் திருமதி.வோகல் என்பவர் மூலம் நிதி திரட்டி, சாமி.நாகப்ப படையாட்சி தியாகத்தை போற்றும் வகையில் ஜொகனஸ்பர்க் நகரில் ஒரு கல்வி உதவித் தொகை நிதியை உருவாக்க வேண்டும்.மேலும், சென்னை, மும்பை உள்ளிட்ட இடங்களிலும் சாமி .நாகப்ப படையாட்சி நினைவு நிதியை உருவாக்க வேண்டும் என அறிவுறுத்தினார் காந்தி. எதுவும் நடக்கவில்லை.

காந்தி தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய பின்னர், இந்திய சுதந்திர போராட்டம் சாமி .நாகப்ப படையாட்சியை முன்னுதாரணமாக கொண்டு அவர் காட்டிய பாதையில் பயணிக்க வேண்டும் என்றார் காந்தி.

தமிழ்நாட்டில்,சென்னை, மதுரை, தூத்துக்குடி, நாகப்பட்டினம் ஆகிய ஊர்களில் பங்கேற்ற கூட்டங்களில் எல்லாம் சாமி.நாகப்ப படையாட்சி தியாகத்தை புகழ்ந்து பேசினார் காந்தி.

16.10.1909 அன்று இந்தியன் ஒப்பீனியனில் தென் ஆப்பிரிக்க இந்தியர் போராட்டம் குறித்து இந்தியாவில் பிரச்சாரம் செய்ய பம்பையில் நடந்த கூட்டத்தில் எச்.எசு.போலக் சாமி.நாகப்ப படையாட்சி தியாகம் வீர மரணம் குறித்து காந்தி பேசியதாக குறிப்பிட்டுள்ளார்.

மகாத்மா காந்தியின் புகழ் ஆதாரங்கள். மகாத்மா காந்தி இந்தியாவின் எரவாடா சிறையில் இருந்த காலத்தில் தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகிப் போராட்டம் எனும் விரிவான நூலை எழுதினார்.இந்த நூல் 1928 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. அந்த நூலில் சாமி.நாகப்ப படையாட்சி குறித்து விரிவாகக் எழுதி உள்ளார். சாமி .நாகப்பன் ஒரு இளம் சத்தியாகிரகி, பதினெட்டு வயதில் சிறையில் அடைக்கப்பட்ட அவர் சிறையில் கொடுக்கப்பட்ட வேலைகளைச் செய்தார். அதிகாலையில் சாலை அமைக்கும் பணிக்காக அழைத்து செல்லப்பட்டார். அங்கு இரட்டை நிமோனியாவால் தாக்கப்பட்டு சிறையிலிருந்து வெளியானவுடன் 06.07.1909 அன்று வீர மரணம் அடைந்தார். சாமி.நாகப்ப படையாட்சி கடைசி நிமிடம் வரை உயிரோடிருந்த ஒவ்வொரு நிமிடமும் சத்தியாகிரகப் போராட்டத்தை மட்டுமே பேசியதாக அவரோடு இருந்தவர்கள் கூறினார்கள். அவர் ஒரு போதும் சிறைக்கு சென்றதை நினைத்து வருந்தவில்லை. *நாட்டுக்காக உயிர் தியாகம் செய்வதை அவர் பெருமிதமாக கருதினார். என அந்நூலில் மகாத்மா காந்தி எழுதி உள்ளார

மஹாத்மா காந்தி 1915 ஆம் ஆண்டு ஏப்ரல் 30, மே 1 ஆகிய நாட்களில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி ஆகிய இடங்களில் இருந்துள்ளார். மயிலாடுதுறை கூட்டத்தில் பேசும் போது தென் ஆப்பிரிக்காவில் உயிர்த்தியாகம் செய்த சாமி.நாகப்ப படையாட்சி, நாராயணசாமி இரண்டு பேருடைய விதவை மனைவிகளைக் காண்பதற்காக இங்கு வந்தேன். இச்செய்தி 03.05.1915 அன்று தி இந்து பத்திரிகையில் வெளியானது.

16.08.1909 அன்று சாமி. நாகப்ப படையாட்சி மரணம் குறித்து , தி டிரான்சுவால் லீடர் பத்திரிக்கைகளில் வெளியான செய்திகளை பற்றி இந்தியன் ஒப்பீனியன் லீடர் பத்திரிக்கையில்.லார்டு ஆம்பத்ல் அவருக்கு மகாத்மா காந்தி கடிதம் எழுதினார்.

08.07.1909 அன்று வெளியான தி டிரான்சுவால் லீடர் 17.07.1909 அன்று வெளியான இந்தியன் ஒப்பீனியன் பத்திரிக்கை மாற்றும் அதே காலகட்டத்தில் வெளியான பிரிட்டோரியா நியூஸ் யூதர்க்ரோனிகல் ஆகிய பத்திரிக்கைகளில் மயிலாடுதுறை .சாமி.நாகப்ப படையாட்சி வீர மரணம் குறித்து விரிவாக செய்தி வெளியானது.

சாமி.நாகப்ப படையாட்சி வீர மரணம் தென் ஆப்பிரிக்கா மட்டுமின்றி,லண்டன் மாநகரிலும் எதிரொலித்ததாகவும், லண்டன் மாநகரில் இது குறித்து மகாத்மா காந்தி 16 .10.1909 அன்று செய்தி வெளியிட்டது இந்தியன் ஒப்பீனியன்.

சாமி.நாகப்பா. நீயும் ஒரு குழந்தை தான், தாய் நாட்டுக்காக நீ உன் உயிரையே தியாகம் செய்தாய். உனது தியாகம் உன் குடும்பத்திற்கு ஆசிர்வாதமாகும். நீ இறந்தாலும் என்றென்றும் வாழ்கிறாய் என நான் நம்புகிறேன். அப்படி இருக்கும் போது, நான் என்னுடைய மகனின் சிறைவாசத்திற்காக ஏன் வருத்தப்படப் போகிறேன்.? என்று எழுதினார் மகாத்மா காந்தி. கூடவே சாமி.நாகப்பன் தியாகத்தோடு ஒப்பிட்டால் தனது மகனின் சிறைவாசம் பெரிதல்ல என்று 04.12.1909 அன்று இந்தியன் ஒப்பீனியனில் காந்தி எழுதி வெளியானது.

சாமி.நாகப்ப படையாட்சி வீரமரணம் குறித்த மேஜர் டிக்சனின் அறிக்கை சிறைத்துறை அதிகாரிகள் குற்றமற்றவர்கள் என்றது. இதற்கு நாடு முழுவதும் சாமி.நாகப்ப படையாட்சி வீர மரணம் குறித்து இந்தியா மற்றும் ஐரோப்பிய தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.அரசாங்கத்தின் அதிகாரிகளே வீர மரணம் உண்மையை மூடிமறைக்கும் அறிக்கை என்று குறிப்பு எழுதினர்.

11.11.1909 அன்று மகாத்மா காந்தி லண்டனிலிருந்து, எழுதிய கடிதத்தில் சாமி .நாகப்ப படையாட்சி வீர மரணம் குறித்த விசாரணை தவறாக முடிந்திருப்பதாகக் கூறி மறு விசாரணைக் கோரினார்.

மகாத்மா காந்தி 11.11.1909 அன்று இங்கிலாந்திலிருந்து வெளியாகும் டெய்லி டெலிகிராஃப் பத்திரிக்கைக்கு, சாமி.நாகப்ப படையாட்சி வீர மரணத்தை குறிப்பிட்டு, இங்கிலாந்து பத்திரிக்கைகள் தமது போராட்டத்தை ஆதரிக்க வேண்டும் என்று கோரினார்.

25.11.1909 அன்று தூதுக்குழுவினரின் நடவடிக்கைகள் குறித்து லண்டனில் இருந்து கட்டுரை எழுதிய காந்தி, தென் ஆப்பிரிக்க இந்தியர்கள், போராட்டத்தை கைவிடுவதற்கு பதிலாக மரணத்தை சந்திக்க தயாராக இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் தானும் ஓரு சாமி.நாகப்ப படையாட்சி ஆக வேண்டும் என விரும்ப வேண்டும் என்று மகாத்மா காந்தி கூறினார். இக்கட்டுரையை 18.12.1909 அன்று இந்தியன் ஒப்பீனியனில் வெளியானது.

18.10.1910 மற்றும் 22.10.1910 அன்று திடிரான்சுவால் லீடர், இந்தியன் ஒப்பீனியன் பத்திரிக்கைகளில் சாமி.நாகப்ப படையாட்சியை அரசாங்கம் சட்டபூர்வமாகக் கொலை செய்தது போன்றுதான் நாராயணசாமியும் கொல்லப்பட்டுள்ளார் என்று எழுதினார் மகாத்மா காந்தி. கூடவே தமிழ் சமூகத்தினரின் வீரத்தை புகழ்ந்து எழுதியிருந்தார்.

15.11.1911 அன்று மகாத்மா காந்தி திருமதி.வோகல் என்பவருக்கு பாராட்டு பத்திரம் எழிதினார், நீங்கள் துவங்கும் நினைவு நிதி வருமானத்தின் மூலம் சாமி.நாகப்ப படையாட்சி பெயரில் ஒரு கல்வி நிதியத்தை அமைக்க வேண்டும். இதனை பாராட்டி தான் காந்தி ஜொகனஸ்பர்க் பெண்மணிகளும் பாராட்டு பத்திரம் அளித்தனர். 09. 12. 1911 வரை சாமி. நாகப்ப படையாட்சி நினைவு நிதிக்காக 138 புவுண்ட் நிதி திரட்டப்பட்டிருந்தது இதனை ஆதரித்து காந்தி 22.06.1912 அன்று இந்தியன் ஒப்பீனியனில், சாமி.நாகப்ப படையாட்சி மாபெரும் தியாகத்தை நினைவு கூறும் வகையில் திருமதி. வோகல் அரும்பணியில் ஈடுப்பட்டுற் ளார். இதற்கு இங்கிலாந்திலும், இந்தியாவிலும் வாழும் பெண்கள் தாராளமாக உதவ வேண்டும் என்று காந்தி எழுதினார்.

1914 ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் சகோதரர் இந்தியாவில் மரணமடைந்தார். 18.03.1914. இல் இந்தியன் ஒப்பீனியனில் மகாத்மா காந்தி, சாமி.நாகப்பனின் மரணத்தை விட எனது சகோதரனின் மரணம் எனக்கு அதிக வலி மிகுந்ததாக இல்லை என எழுதி இருந்தார்.

1914 ஆம் ஆண்டில் எட்டு ஆண்டு போராட்டத்திற்கு பிறகு தென் ஆப்பிரிக்க இந்தியர்களின் போராட்டம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்திருந்தது. 08.07.1914 அன்று இது குறித்து  இந்தியன் ஒப்பினீயனில் *மகாத்மா காந்தியின் வெற்றிக் கட்டுரையில் சாமி .நாகப்பன், நாராயணசாமி, அர்பத்சிங், வள்ளியம்மா ஆகியோரின் உயிர்த்தியாகம் தான் போராட்டத்தின் வெற்றிக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.

09.07.1914 அன்று டர்பன் நகரில் நடந்த குசராத் சபா கூட்டத்தில் பேசிய காந்தி, தென் ஆப்பிரிக்க இந்திய வம்சாவழியனரால் நடத்தப்பட்ட சத்தியாகிரகம் போரட்டம், எனது சகோதரன் நாகப்ப படையாட்சி, எனது சகோதரி வள்ளியம்மா, எனது சகோதரன் நாராயணசாமி ஆகியோரின் காலடித்தடங்களை இந்தியர்கள் பின்பற்றி நடக்க வற்புறுத்துகிறேன் என்று பேசினார். இச்செய்தி 15.07.1914 இந்தியன் ஒப்பீனியனில் வெளியானது.

காந்தி தனது 21 ஆண்டு கால தென் ஆப்பிரிக்க வாழ்க்கையை முடித்து கொண்டு, இந்தியாவுக்கு திரும்பும் நிலையில் 14.07.1914 அன்று ஜொகனஸ்பர்க் நகர் கூட்டத்தில் ஜொகஸ்பர்க் நகரம் தான் சாமி .நாகப்பன், நாராயணசாமி, வள்ளியம்மா எனும் பதின்வயதினரை தந்தது என்று பேசினார். 15.07.1914 அன்று காலை 11.30 மணிக்கு ஜொகனஸ்பர்க் நகரின் பிராம்ஃபோன்டெய்ன் கல்லரைத் தோட்டத்தில், சாமி.நாகப்ப படையாட்சி, கல்லறையில் நினைவுப் பலகையை காந்தி திறந்து வைத்து கீழ்கண்டவாறு பேசினார். சாமி.நாகப்பன் முகத்தை என்னால் சரிவர நினைவு கூற முடியாமல் போகலாம். ஆனால், அவர் பட்ட துன்பத்தை என்னால் உணர முடிகிறது.

கொடுமையான சிறைக்கொட்டியில் கடும் குளிரில் அவர் தேவையில்லாமல் அலைகழிக்கப்பட்டர்.நாகப்பன் இதயம் இரும்பின்னால் ஆனது. அவர் சிறையிலிருந்து உருக்குலைந்து இறக்கும் தருவாயில் வெளியேறினார். ஆனால், அந்த நிலையிலும், எனக்கு இத்துன்பம் ஒரு பொருட்டே அல்ல. ஒரு முறைதான் சாகப்போகிறேன். இப்போதும் சிறைச் செல்ல தயாராக இருக்கிறேன் என்று துணிந்து சொன்னார். அப்படிப்பட்ட கலங்காத மனம் படைத்த சாமி.நாகப்ப படையாட்சி இறந்து விட்டார். ஆனாலும் அவர் ஒவ்வொரு இந்தியரின் நினைவிலும் என்றென்றும் நீங்காது வாழ்வார். என்றார் காந்தி. இச்செய்தி 27.07.1914 அன்று இந்தியன் ஒப்பீனியனில் வெளியானது.

04.08.1914, அன்று லண்டனில் கஸ்தூரிபா , சரோஜினி நாயுடு, லாலா லஜபதிராய், முகமது அலி ஜின்னா ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தில் காந்தி. சென்னை மாகானத்தைச் சேர்ந்த வீரமிக்க சாமி.நாகப்ப படையாட்சி சிறையில் கொடுமைகள் அனுபவித்து வீரமரணம் அடைந்ததை புகழ்ந்தார். இச்செய்தி 30.09.1914 அன்று இந்தியன் ஒப்பீனியனில் வெளியானது.

21.04.1915 அன்று தி. இந்து பத்திரிகையில் 06.03.1918 ஏக் தர்மயுத்தா எனும் குஜராத்தி பத்திரிகையிலும், காந்தி நாகப்பன் தியாகத்தை புகழ்ந்து பேசிய செய்தி வந்தது.

28.03.1919 மற்றும் 29.03.1919 தூத்துகுடி, நாகப்பட்டிணம் இரண்டு ஊரிலும், ரௌலட் சட்ட எதிர்ப்பு குறித்து காந்தி பேசும் போது, சாமி.நாகப்ப படையாட்சி தியாகத்தை புகழ்ந்தார். இச்செய்தி.02.04.1919 மற்றும் 03.04. 1919 தி இந்து நாளிதழில் வெளியானது.

சாமி. நாகப்ப படையாட்சி பிறந்த ஊரான மயிலாடுதுறையில் இவருக்கு சிலை நிறுவும் பனி தற்போது முடியும் நிலையில் உள்ளது.

– நன்றி சி ஆர் ராஜன்

கார்ட்டூன் கேலரி