சுட்டுக்கொல்லப்பட்ட பாடகி சமீரா சிந்து

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் விழுந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தபோது, 8 மாத கர்ப்பிணி பாடகி  துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

பாகிஸ்தானில் உள்ள  சிந்து மாகாணத்தில் உள்ள லர்கானா நகருக்கு அருகிலுள்ள கங்கா என்ற கிராமத்தில் விருந்து நிகழ்ச்சி ஒன்று கொண்டாடப்பட்டது.

அந்த நிகழ்ச்சியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பாடகி சமீரா சிந்து என்ற இளம்பெண் பாடிக்கொண்டிருந்த தாகவும், அப்போது நிகழ்ச்சியில் பங்கேற்ற தாரிக் அகமது என்பவர் அவரை எழுந்து நின்று பாடச்சொன்னதாக வும், அதற்கு சிந்து, தான் 8 மாத கர்ப்பமாக இருப்பதால் தன்னால் எழுந்து நின்று பாட முடியாது என மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த தாரிக் அகமது சிந்துவை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.

இதனால் கீழே விழுந்த சிந்துவை அங்கிருந்தவர்கள் உடடினயாக மருத்துவமனைக்கு தூக்கி சென்றதாகவும், ஆனால், உயிரிழந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சிந்துவை சுட்ட தாரிக் அகமதுவை கைது செய்ய வேண்டும் என நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

தற்போது 28 வயதே ஆகும் சிந்துக்கு கடந்த ஆண்டுதான் திருமணம் நடைபெற்றதாகவும், அவர் ஒரு உள்ளூர் மேடை பாடகி என்றும் கூறப்படுகிறது.

அவர் இதுவரை  சிந்தி நாட்டுப்புற மற்றும் சூஃபி இசையின்  எட்டு ஆல்பங்களை  உருவாக்கி இருப்பதாகவும், இசையே தனது வாழ்வாதாரத்தின் முக்கிய ஆதாரமாக சிந்து கொண்டிருந்தாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர்.