தந்தையை மிஞ்சும் மகன் : ராகுல் டிராவிட் மகன் அரைசதம் எடுத்து சாதனை

--

இந்திய கிரிக்கெட்டில் சுவர் என்று வர்ணிக்கப்பட்ட ராகுல் திராவிடின் மகன் சமித் டிராவிட் 14வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னால் கேப்டனாக இருந்த ராகுல் டிராவிட் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி இந்தியாவின் சுவர் என்று அழைக்கப்பட்டார். டிராவிட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் அவரின் மகன் தற்போது தந்தைக்கு இணையாக உருவாகி வருகிறார்.

sambit

12வயதுடைய சமித் டிராவிட் 14வயதுக்குட்பட்டோருக்கான காட்டனேனியன் சீல்ட் போட்டியில் பங்கேற்று விளையாடினார். இதன் இறுதி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய சமித் டிராவிட் 51 ரன்களை எடுத்து அசத்தினார். பேட்டிங் மட்டுமில்லாமல் பந்துவீச்சிலும் சமித் டிராவிட் சிறந்து விளங்கினார்.

பந்து வீச்சில் 9 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை சமித் கைப்பற்றினார். இதனால் கோப்பையை கைபற்றுவதற்கு சமித் டிராவிட் காரணமாக இருந்தார். கடந்த ஜனவரி மாதம் பிடி டபிள்யு யு-14 கிரிக்கெட் போட்டியில் பேட்டிங்கிலும், பந்து வீச்சிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சமித் டிராவிட் தொடர் நாயகன் விருதை பெற்றார்.

samit

இதேபோல் 2015ம் ஆண்டு நடைபெற்ற யு-12வயதுக்குட்பட்டோருக்கான கோபாலன் கிரிக்கெட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சமித் டிராவிட் சிறந்த பேட்ஸ்மேனுகான விருதை தட்டி சென்றார்.

தனது தந்தை போல பேட்டிங்கில் அசத்தி வரும் சமித் டிராவிட் பந்து வீச்சிலும் பட்டையை கிளப்பி ஆள் ரவுண்டராக மாறி வருகிறார்.