புகைப்படங்களை தன்னிச்சையாக அனுப்பும் சாம்சங் மொபைல்கள்

டில்லி

சாம்சங் மொபைலில் சேமிக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் அதுவாகவே மற்றவர்களுக்கு அனுப்பப் படுவதாக புகார் எழுந்துள்ளது.

மொபைலில் சேமிக்கப்பட்டுள்ள புகைபடங்களை மொபைல் பயனாளிகள் தங்களுக்கு தேவைப்பட்டவர்களுக்கு அனுப்பி வைப்பது வழக்கம்.   இதற்கான சமூக வலைத் தள செயலிகள் மட்டும் இன்றி மொபைலிலும் சில செயலிகள் இவ்வாறு உள்ளன.   இவ்வாறு பயனாளிகள் விருப்பப்பட்டால் அவர்களால் அனுப்ப முடியும்.

ஆனால் சாம்சங் மொபைலில் பதியப் பட்ட புகைப்படங்கள் தானாகவே அந்த மொபைல்களில் இருந்து பல எண்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.   குறிப்பாக எஸ்9 மற்றும் எஸ்9+ ஆகிய மொபைல்களில் இருந்து இவ்வாறு அனுப்பப்பட்டுள்ளன.   சாம்சங் மெசேஜிங் செயலி மூலம் தானாகவே அனுப்பப்படும் இந்த புகைப்படங்கள் பற்றி மொபைல் உபயோகிப்பவர்களுக்கு தெரிவதில்லை.   ஆனால் அது அனுப்பி வைக்கப்பட்டவர்களுக்கு நோட்டிஃபிகேஷன் காட்டுகிறது.

இந்த புகாரை ஒட்டி சாம்சங்  நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு விரைவில் இந்த தவறு சரி செய்யப்படும் என உறுதி அளித்துள்ளது.   சமீபத்தில் இந்த மெசேஜிங் செயலி தர முன்னேற்றம் செய்யப்பட்டதில் இருந்து இந்த தவறுகள் நிகழ்வதாக மொபைல் பயனாளிகள் தெரிவித்துளனர்.   இதை ஒட்டி சாம்சங் நிறுவனம் செயலிகளுக்கு  செய்திகள் அனுப்பும் போது அனுமதி தேவை என்பதை தேர்ந்தெடுக்க பயனாளிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.