விமான பயணிகளுக்கு இலவச சாம்சங் நோட்8 ஸ்மார்ட்போன்! எங்கே….?

விமான பயணிகளுக்கு குளிர்பானங்களுக்கு பதிலாக சாம்சங் நோட்8 ஸ்மார்ட் போனை இலவசமாக வழங்கி சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது சாம்சங் நிறுவனம்.

சாம்சங் நிறுவனம் தனது புதிய சாம்சங் நோட் 8 கேலக்சி ஸ்மார்ட் போனை விளம்பரத்தும் நோக்கத்துடன் ஐபீரியாவின் விமானம் IB514ல் பயணம் செய்த 200 பயணிகளுக்கு இலவசமாக போனை வழங்கி ஆச்சரியப்படுத்தியது.

மாட்ரிடத்தில் இருந்த  பறந்த விமானத்தில்,  பயணிகளுக்கு இந்த சந்தோஷ அதிர்ச்சியை அளித்துள்ளது சாம்சங் ஸ்பெயின்  நிறுவனம்.

இதனால் அந்த விமானத்தில் பயணிகள் வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.