உலகிலேயே முதல் முறையாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட் போன் அறிமுகம்!

உலகிலேயே முதல் முறையாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட் போனை சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

samsung

தற்போதய காலக்கட்டத்தில் ஸ்மார்ட் போன் அனைவரையும் தன் வசப்படுத்தி உள்ளது. ஸ்மார்ட் போன் இல்லாத நபரே இல்லை என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் ஸ்மார்ட் போனை தயாரிக்கும் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு புதிய ரக ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில் அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்ட மடிக்கக் கூடிய ஸ்மார்ட்போனை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. மடிக்கக் கூடிய இந்த ஸ்மார்ட் போன் எப்படி காட்சி அளிக்கும் என்பதை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சாம்சங் நிறுவனம் காட்சிப்படுத்தியது.

இந்நிலையில் தற்போது கேலக்ஸி அன்பேக்டு 2019 விழாவில் மடிக்க கூடிய ஸ்மார்ட் போனை கேலக்ஸி ஃபோல்டு என்ற பெயரில் சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட் போன் 7.3 இன்ச் மற்றும் 4.6 இன்ஸ் அளவுக் கொண்டது. இரண்டு டிஸ்ப்ளேக்களுடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த போனில் இரண்டு பேட்டரிகள் இணைக்கப்பட்டுள்ளன.

45

சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான கேலக்ஸி ஃபோல்டு ஆடம்பர சாதனம் என்றே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 7.3 இன்ச் இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்மார்ட்போன் திறக்கப்பட்ட நிலையில், சுமார் 7.3 இன்ச் அளவிலும், மடிக்கக்கப்பட்ட நிலையில், 4.6 இன்ச் அளவில் பயன்படுத்தலாம். மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் முற்றிலும் புதிய முறையில் உற்பத்தி செய்யப்பட்டதாக சாம்சங் தெரிவித்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு சிறப்பம்சங்கள்:

1.7.3 இன்ச் இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் டைனமிக் AMOLED பேனல்

2. 4.6 இன்ச் சூப்பர் AMOLED பேனல்

3. 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி

4. 16 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, 12 எம்.பி. வைடு ஆங்கிள் கேமரா, டூயல் பிக்சல் AF, OIS, f/1.5 – f/2.4

5. 12 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, PDAF, OIS, f/2.4, 10 எம்.பி. f/2.2 + 8 எம்.பி. டெப்த் கேமரா, f/1.9 (உள்புறம் இரு கேமரா செட்டப்)

6. 10 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2

7. 4380 எம்.ஏ.ஹெச். பேட்டரி (இரு பேட்டரிகள்)

இத்துடன் வாட்ஸ்அப், யூடியூப் மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் உள்ளிட்டவை சீராக இயங்க வைக்க செயலிகள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இத்தகைய சிறப்பம்சம் கொண்ட ஸ்மார்ட் போன் ஏப்ரல் மாத்ம் 26ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரீன், புளு, சில்வர் மற்றும் பிளாக் என நான்கு நிறங்களில் அறிமுகப்படுத்தப்படும் போனின் மதிப்பு ரூ. 1,41,300 என நிர்ணயம் செய்யப்பட்டுளது.