ஹிப்ஹாப் ஆதியின் பேட்டி குழப்பமாக இருக்கிறது :சமுத்திரகனி


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் பங்கு கொண்ட ஹிப் ஆப் ஆதி, “தேசத்துக்கு எதிரான முழக்கங்களை போராட்டக்காரர்களில் சிலர் எழுப்புகிறார். ஆகவே நான் போராட்டத்தில் இருந்து விலகுகிறேன்” என்று அறிவித்தார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவு கொடுத்துவரும் திரைப்பட இயக்குநர் சமுத்திரகனி, “ஹிப்ஹாப் ஆதியின் கருத்து குழப்பத்தை ஏற்படுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “ இந்த போராட்டத்தை இளைஞர்கள் வெகு சிறப்பாக எடுத்துச் சென்றிருக்கிறார்கள். அறிவாற்றலுடன், செயல்படுகிறார்கள். அவர்களுக்கு ஏதும் அறிவுரை சொல்லத் தேவையில்லை. அவர்கள் பின் அனைவரும் நின்றால் போதும்” என்றும் சமுத்திரகனி தெரிவித்துள்ளார்.