கமல் – ஷங்கர் கூட்டணியில் மீண்டும் தொடங்கப்பட்ட படம் ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் தயாரிக்க, படப்பூஜையுடன் படப்பிடிப்பை ஏற்கனவே தொடங்கப்பட்டது .ஆனால் ஒரு சில காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் ‘இந்தியன் 2’ பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.ஏப்ரல் 2021-ல் வெளியிடலாம் என கூறப்படுகிறது.

காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர், சித்தார்த், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் கமலுடன் நடிக்கவுள்ளனர். அனிருத் இசையமைக்கவுள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ரத்னவேலு இணைந்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் இந்திய சுதந்திரத்திற்கு முந்தைய காட்சிகளில் இளம் வயது கமல்ஹாசனுக்கு நண்பனாக நடிக்க நடிகர் சமுத்திரக்கனி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.